ஷங்கரின் படத்தில் 2வது முறையாக இணைந்த பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஒரு திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த பிரபல நடிகர் ஒருவர் அவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆர்சி15’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்ற நிலையில் தற்போது ‘ஆர்சி 15’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ராம்சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Versatile actor @iam_SJSuryah joins our stellar cast!
— Sri Venkateswara Creations (@SVC_official) September 9, 2022
Welcome on board sir @shankarshanmugh @AlwaysRamCharan@advani_kiara @yoursanjali @MusicThaman @DOP_Tirru @ramjowrites @saimadhav_burra @SVC_official #SVC50 #RC15 pic.twitter.com/Az5CQxIeta
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com