close
Choose your channels

'தி ஃபேமிலிமேன் 2' மனோஜ் பாஜ்பாய் மனைவி ஒரு தமிழ் நடிகையா?

Saturday, June 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி நடிப்பில் உருவான ’தி ஃபேமிலிமேன் 2’ வெப்தொடர் சமீபத்தில் வெளியானது என்றும் இந்த தொடர் பெரும்பாலான ரசிகர்களின் வரவேற்பை பெற்றாலும் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த தொடருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரை நிறுத்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரின் நாயகன் மனோஜ் பாஜ்பாயின் மனைவி ஒரு தமிழ் திரைப்பட நடிகை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ’அள்ளித்தந்த வானம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நேஹா தான் இவரது மனைவி என்பது தெரிய அந்துள்ளது. மனோஜ் பாஜ்பாய் - நேஹா திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்றது என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா, லைலா நடிப்பில் ஸ்ரீதர் பிரசாத் இயக்கத்தில் உருவான ’அள்ளித்தந்த வானம்’ திரைப்படத்தில் மீனாட்சி என்ற முக்கிய வேடத்தில் நேஹா நடித்திருப்பார் என்பதும், இதனை அடுத்து அவர் கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’தி ஃபேமிலிமேன் 2’ நாயகன் மனோஜ் பாஜ்பாயின் மனைவி ஒரு தமிழ் நடிகை என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment