முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல் டீம்க்கு அசத்தலான விருந்து.
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஹே இந்தாம்மா'என்ற ஒத்த வார்த்தையில் சீரியல் பாக்குற ஆண்ட்டி அங்கிள்ள இருந்து பட்டி தொட்டி வரைக்குமே பரவிய இந்த அல்டிமேட் டயலாக் எல்லாரோட மனசுலயும் இப்போ வரைக்கும் பதிஞ்சு போயிருக்கும்.சீரியலில் இவருடைய இந்த நக்கலான நய்யாண்டிக்கும் திமிரான பார்வைக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
அப்படியே அழகா போயிட்டு இருந்த சீரியலுக்கு திடிரென்று அதிர்ச்சி தரும் வகையில் அவரை பார்த்து ரசித்த நம்ம எல்லோரையும் ஒரு நொடியில் அழுக வெச்சிட்டு போய்ட்டாருன்னும் சொல்லலாம்.உங்களுக்கே தெரிந்து இருக்கும் நம்ம மாரிமுத்து இறப்பின்போது பலர் கண்ணீர் சிந்தியதை,
திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை மொத்தமாக மாறுகின்றன ஏன் இந்த சமுதாயம் மாற்றுகிறது என்றும் சொல்லலாம்.
அவளது சொந்த விருப்பங்களை பறித்து அவளை அவளாக வாழ விடாமல் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் ஒரு அறையில் அதாவது சமயலறையில் போட்டு பூட்டி அடைத்த இன்றைய நிதர்சனங்களை அப்படியே தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டிய நம் எதிர்நீச்சல் சீரியல்.
அப்படிப்பட்ட புகுந்த வீட்டை நாலு பேர் கொண்ட மருமகள்கள் சமாளிக்கும் விதம், கையாளும் முறை ,அவர்களின் விவேகம் மற்றும் துணிச்சல் போன்றவற்றை ஒரு காணொளியில் காட்டிய இயக்குனர் திருச்செல்வம்க்கே இந்த பெருமை சேரும்.
மாரிமுத்து இறப்பிற்கு சற்று தலை சாய்ந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.இது பலரை வருத்தத்திற்கு ஆழ்த்தியுள்ளது.இந்த தொடர் மீண்டும் இரண்டாம் பாகமாக வரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.இது போன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது சேனலை பின்தொடரவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments