ஆஸ்கர் விருது வென்ற படத்திற்கும் 'சூரரை போற்று' படத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா?
- IndiaGlitz, [Monday,March 13 2023]
ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற தமிழ் குறும்படத்திற்கும் ’சூரரை போற்று’ படத்திற்கும் தொடர்பு உள்ளது என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடந்த நிலையில் இதில் தமிழ் ஆவண குறும்படமான தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய யானைகள் முகாமில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த யானை பராமரிப்பாளர்கள் குறித்த ஆவணப்படம் தான் இந்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயைப் பிரிந்து தவிக்கும் இரண்டு யானை குட்டிகளை பழங்குடியின தம்பதியினர் பராமரிக்கும் கதையை இயக்குனர் கார்த்திகி கன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார் என்பதும் இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தை தயாரித்தது சிக்கன்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிறுவனம்தான் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சூர்யா நடிப்பில் சுதாகொங்காரா இயக்கத்தில் உருவான ’சூரரை போற்று’ என்ற படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.