ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் சட்டத்தால் வேலையிழந்த ஓட்டுனர்
- IndiaGlitz, [Saturday,September 09 2017]
வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. இதை நீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்ததால் நேற்று முன் தினம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் தங்கள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை வாகன உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டு தான் வேலைக்கு சேருகின்றனர். ஆனால் தற்போது இந்த புதிய நடைமுறையால் அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன உரிமையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒருசில உரிமையாளர்கள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை கொடுத்துவிட்டு ஓட்டுனர்களை வேலையில் இருந்து தூக்கிவிடுகின்றனர். இதுபோல பாதிக்கப்பட்ட திருவான்மியூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் என்பவர் திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்டார்.
இந்த நிலையில் வாகன உரிமையாளர்கள் தங்களிடம் வேலைக்கு சேரும் ஓட்டுனர்களிடம் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை கேட்கக்கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது...