புகார் பெட்டி பிரச்சாரம் எல்லாம் மலையேறி விட்டது… எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகார் பெட்டி வைத்து அதன்மூலம் குறைகள் கேட்கப் பட்டது. அதுபோன்ற பிரச்சாரத்தை தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஆனால் நாம் எவ்வளவோ நவீன வசதிகளுக்கு முன்னேறி விட்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசியுள்ளார்.
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 1100 இலவச குறைத் தீர்ப்பு சிறப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. தமிழக மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி 24 மணிநேரமும் தங்களது குறைகளை நேரடியாகத் தமிழக அரசுக்குத் தெரிவிக்க முடியும். இதனால் குறைகளும் மிக விரைவாகத் தீர்த்து வைக்கப்பட்டு விடும். இச்சிறப்பு திட்டத்தைக் குறித்து தமிழகச் சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் மாதமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதையொட்டி தற்போது இலவசக் குறைத் தீர்ப்பு சிறப்பு திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி மாவட்டம் தோறும் குறைத் தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் எந்தவிதமான பயன் ஏற்பட போகிறது என்று தமிழக முதல்வர் எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பியதோடு இனிமேல் திமுகவிற்கு மனு வாங்கும் வேலை கூட இருக்காது என்றும் ஸ்ரீவைகுண்டத்தில் பேசிய தமிழக முதல்வர் அதிரடி கருத்து வெளியிட்டு உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments