பணத்தை வாங்கிக்கொண்டு 6,300 பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய இயக்குநர்!!! திடுக்கிடும் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,July 17 2020]

 

வங்காளத்தேசத்தில் உலகையே உலுக்கும் ஒரு மோசடி சம்பவம் நடைபெற்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வங்காளத் தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையின் இயக்குநர், கொரோனா பரிசோதனை செய்யாமலே 6,300 பேருக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டில் கொரோனா பரிசோதனை செய்தவற்கு தனியார் மருத்துவ மனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிரபல மருத்துவமனையில் இயக்குநராக இருக்கும் முகுமது ஷஹீர் (42) என்பவர் கொரோனா பரிசோதனையை மக்களுக்கு இலவசமாக செய்து கொடுப்பதாகக் கூறி அந்நாட்டின் சுகாதாரத் துறையிடம் அனுமதி வாங்கியிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இலவசமாக பரிசோதனை செய்துத் தரப்படும் என பொது மக்களிடம் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கொரோனா பரிசோதனையே செய்யாமல் மோசடியில் ஈடுபட்டதாக இயக்குநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டின் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என எதிர்பார்த்த இயக்குநர் இந்தியாவிற்கு தப்பித்து செல்ல முயற்சித்து இருக்கிறார். இந்திய- வங்காளத்தேச எல்லையில் உள்ள ஆற்றங் கரையில் பல நாட்களாக மறைந்து இருந்த அவரை நேற்று அந்நாட்டின் கைது செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட முகமதுவிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் என்றும் அதில் பல திடுக்கிடும் மோசடிகள் வெளிவந்தாகவும் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சுகாதாரத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 10,500 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தரவு சேகரிக்கப் பட்டுள்ளது. ஆனால் வெறுமனே 4,200 பேருக்கு மட்டுமே முறையான பரிசோதனைகள் செய்யப் பட்டு இருக்கின்றன. மீதியுள்ள 6,300 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படவே இல்லை எனத் தெரிய வந்திருக்கிறது. மேலும் பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு இப்படியான மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்களா தேசத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மருத்துவர்கள் இப்படியான மோசடிகளில் ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதத்தில் மட்டும் பல மருத்துவர்கள் மோசடி வழக்குகளில் கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வங்காளத் தேசத்தில் கொரோனா கணக்கு எண்ணிக்கை கேள்விக்குறியாகும் நிலைமை உருவாகியிருக்கிறது. மேலும் பரிசோதனை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் 1,96,323 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது என்றும் 2,496 உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

More News

உலகில் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலம் தமிழ் கல்வி: மதன்கார்க்கியின் புதிய முயற்சி

எளிமையான முறையில் தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகளுக்காக பாடலாசிரியர் மதன்கார்க்கி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

என் தகப்பனார் இவருடைய பெரும் ரசிகர்: டிஐஜியின் தாத்தா குறித்து கமல்ஹாசன்

எளிமையும் நேர்மையும் ஒன்றிணைந்தவரும், தமிழக அரசியல் அடையாளங்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் அதே எளிமையை உடைய அவருடைய பேத்தி ராஜேஸ்வரி அவர்கள் சமீபத்தில் டிஐஜி ஆக பொறுப்பேற்றார்.

வடபழனி காவல்நிலைய போலீஸ் விசாரணையில் வனிதா!

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், வனிதா விஜயகுமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூரியா தேவி

கொரோனாவை கட்டுப்படுத்த இதைக் குடிங்க… ஆயுஷ் அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொது மக்களுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ஊரடங்கு நேரத்திலும் முதலீட்டில் கலக்கும் தமிழக அரசு!!! தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை!!!

கொரோனா தாக்கத்தால் இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன