பணத்தை வாங்கிக்கொண்டு 6,300 பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய இயக்குநர்!!! திடுக்கிடும் சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்காளத்தேசத்தில் உலகையே உலுக்கும் ஒரு மோசடி சம்பவம் நடைபெற்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வங்காளத் தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையின் இயக்குநர், கொரோனா பரிசோதனை செய்யாமலே 6,300 பேருக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டில் கொரோனா பரிசோதனை செய்தவற்கு தனியார் மருத்துவ மனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிரபல மருத்துவமனையில் இயக்குநராக இருக்கும் முகுமது ஷஹீர் (42) என்பவர் கொரோனா பரிசோதனையை மக்களுக்கு இலவசமாக செய்து கொடுப்பதாகக் கூறி அந்நாட்டின் சுகாதாரத் துறையிடம் அனுமதி வாங்கியிருந்தார் எனக் கூறப்படுகிறது.
இலவசமாக பரிசோதனை செய்துத் தரப்படும் என பொது மக்களிடம் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கொரோனா பரிசோதனையே செய்யாமல் மோசடியில் ஈடுபட்டதாக இயக்குநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டின் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடரும் என எதிர்பார்த்த இயக்குநர் இந்தியாவிற்கு தப்பித்து செல்ல முயற்சித்து இருக்கிறார். இந்திய- வங்காளத்தேச எல்லையில் உள்ள ஆற்றங் கரையில் பல நாட்களாக மறைந்து இருந்த அவரை நேற்று அந்நாட்டின் கைது செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட முகமதுவிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் என்றும் அதில் பல திடுக்கிடும் மோசடிகள் வெளிவந்தாகவும் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சுகாதாரத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 10,500 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தரவு சேகரிக்கப் பட்டுள்ளது. ஆனால் வெறுமனே 4,200 பேருக்கு மட்டுமே முறையான பரிசோதனைகள் செய்யப் பட்டு இருக்கின்றன. மீதியுள்ள 6,300 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படவே இல்லை எனத் தெரிய வந்திருக்கிறது. மேலும் பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு இப்படியான மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்களா தேசத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மருத்துவர்கள் இப்படியான மோசடிகளில் ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதத்தில் மட்டும் பல மருத்துவர்கள் மோசடி வழக்குகளில் கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வங்காளத் தேசத்தில் கொரோனா கணக்கு எண்ணிக்கை கேள்விக்குறியாகும் நிலைமை உருவாகியிருக்கிறது. மேலும் பரிசோதனை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் 1,96,323 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது என்றும் 2,496 உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout