தக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும்! சீன அதிபர் விருந்தின் மெனு

  • IndiaGlitz, [Saturday,October 12 2019]

சீன அதிபர் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். அவருக்கு தமிழர்கள் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நேற்று மாமல்லபுரத்தின் கடற்கரை கோவில் உள்பட பல பகுதிகளை பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜிங்பிங் சுற்றிப்பார்த்தார்

இதனையடுத்து பிரதமர் மோடி, நேற்றிரவு சீன அதிபருக்கு அறுசுவை விருந்து அளித்தார். இந்த விருந்தில் பெரும்பாலும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. சீன அதிபருக்கு பாரம்பரிய தமிழக பரிமாறப்பட்டதாகவும், அவரும் அதனை ரசித்து சாப்பிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த விருந்தில் இருந்த மெனு வகைகளை தற்போது பார்ப்போம்

தக்காளி ரசம், கேரளாவில் புகழ் பெற்ற மலபார் லாப்ஸ்டர், சிக்கனுடன் தயிர் மற்றும் மிளகாய் சேர்த்த கோரி கெம்பு, மட்டன், தஞ்சாவூர் கோழிக்கறி, மட்டன் குழம்பு, பீட்ரூட் சூப், பச்சை சுண்டக்காய் குழம்பு, சாம்பார், பிரியாணி, இந்தியன் பிரெட் வகைகள், அல்வா, ஐஸ்க்ரீம் மற்றும் டீ,காபி, மசாலா டீ ஆகியவை இந்த விருந்தில் பரிமாறப்பட்டுள்ளது.

சீன அதிபரும் அவருடன் வருகை தந்திருந்த அதிகாரிகளும் இந்த விருந்தை ரசித்து சாப்பிட்டு பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது