கமலுக்கு எச்சரிக்கை, ரஜினியுடன் செல்பி: வைகோ திட்டம்தான் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருந்தபோது அதற்கு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் 'அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு' என்று தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்து வைகோ கூறியபோது, 'அரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் என்றும், நடிகர் கமல் எங்களுக்கு அறிவுரைகள் சொல்ல வேண்டாம்' என்றும், நாங்கள் எச்சரிக்கைக்காக பேசுவது வெட்டிப் பேச்சு அல்ல; கமல் பார்த்து பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று பார்த்திபனின் மகள் கீர்த்தனா திருமணத்தில் கலந்து கொண்ட வைகோ, அதே திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ரஜினியை பார்த்து நலம் விசாரித்து கைகுலுக்கினார். மேலும் அவருடன் செல்பியும் எடுத்து கொண்டார்
வைகோ பின்பற்றும் திராவிட அரசியலை பின்பற்றுவதாக கூறும் கமலுக்கு எச்சரிக்கையும், திராவிட அரசியலுக்கு எதிரான ஆன்மீக அரசியலை நடத்தவுள்ள ரஜினியுடன் செல்பியும் எடுத்து கொண்டுள்ள வைகோவின் திட்டம்தான் என்ன? என்பது புரியாமல் அரசியல் விமர்சகர்களே குழப்பத்தில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments