ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியாதா? பிரபல நடிகை ஆவேசம்!
- IndiaGlitz, [Tuesday,February 09 2021]
ஆபாசத்துக்கு நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியாமல் தனது எட்டு வருட சமூக வலைதள கணக்கை முடக்கி விட்டார்கள் என பிரபல நடிகை ஒருவர் ஆவேசமாக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மராத்தி நடிகை நிகிதா கோகலே. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படங்களை கலையம்சத்துடன் பதிவு செய்து வந்தார். இந்த புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் மற்றும் லைக்ஸ்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிர்வாண புகைப்படங்கள் இருந்தது என்பதற்காக அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து நடிகை நிகிதா கோகலே ஆவேசமாக தனது கருத்தை கூறியுள்ளார். கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் போன்றதுதான் தங்களுடைய நிர்வாண கலை என்றும், ஆபாசத்திற்கு நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியாமல் சமூக வலைதள நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் கண்ட கண்ட உணவை சாப்பிடும் புகைப்படங்களையும் பைத்தியக்காரத்தனம் செய்யும் போட்டோக்களையும் அனுமதிக்கும் சமூக வலைதளங்கள் இதுபோன்ற கலைநயமிக்க புகைப்படங்களை பதிவிட அனுமதி செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தன்னுடைய சமூக வலைதள பக்கம் தடை செய்யப்பட்டதை அடுத்து தனது அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தனது நிர்வாண படங்களை தொடர்ந்து பதிவு செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.