'டாக்டர்', 'டான்' படங்களுக்கும் 'அமரனுக்கும் உள்ள வித்தியாசம்.. தளபதி இடத்தை பிடித்துவிடுவாரோ?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்’ திரைப்படம் மூன்றே நாளில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் எட்டியுள்ளது. ஆனால் அந்த இரண்டு படங்களுக்கும் 'அமரன்’ படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான 'அமரன்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது. இது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
தீபாவளி வெற்றி படம் 'அமரன்’ தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படம் மூன்றே நாட்களில் நூறு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் 25 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், ’டான்’ திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் 'அமரன்’ திரைப்படம் வெறும் மூன்றே நாட்களில் நூறு கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து, உண்மையாகவே அவர் தளபதி விஜய் இடத்தை பிடித்து விட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது.
ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் மட்டுமே இவ்வளவு வேகமாக 100 கோடி ரூபாய் வசூலை தரும் நிலையில், உச்ச இடத்தை தற்போது சிவகார்த்திகேயன் அடைந்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout