'அருவி', 'அஸ்மா' இரண்டு படத்திற்கும் என்ன வித்தியாசம்: இயக்குனர் அருண்பிரபு விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களின் ஆதரவையும் பெற்று திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிவருகின்றது. நாளை இரண்டு புதிய படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் ஒருசில திரையரங்குகளில் அருவி படத்தை தூக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் எகிப்திய படமான 'அஸ்மா' படத்தின் அப்பட்டமான காப்பி என்று ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அஸ்மா' படத்தை முழுவதும் பார்க்காவிட்டால் கூட பரவாயில்லை, குறைந்தபட்சம் அஸ்மா டிரைலரை பார்த்தால் கூட அருவிக்கும் அஸ்மாவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் விக்கிபீடியாவில் கூறப்பட்டுள்ள கதைச்சுருக்கத்தை வைத்து ஒருசிலர் ஒரு நல்ல படத்தை காப்பி என்று விமர்சனம் செய்வதற்கும் ஒரு உள்ளர்த்தம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் அருவி, அஸ்மா படங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து இயக்குனர் அருண்பிரபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு 'அஸ்மா' திரைப்படத்தை நான் பார்த்தேன். ஒரே மாதிரியான களத்தை கொண்டுள்ள இரண்டு படங்களை ஒப்பிட்டு விவாதிப்பது கண்டிப்பாக சினிமா ஆர்வலர்கள் செய்ய வேண்டியதே. ஆனால் இரண்டு படங்களையும் முழுதாகப் பார்த்துவிட்டு அவர்கள் பார்வையை வெளிப்படுத்த வேண்டும்.
'அஸ்மா' திரைப்படத்தைப் பார்க்க 'அருவி' ஒரு நல்ல வாய்ப்பு தந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 'அருவி' மற்றும் 'அஸ்மா' இரண்டையும் பார்த்தபின், இரண்டும் முற்றிலுமாக வெவ்வேறானது என்றும், ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதும் தெரியும். விக்கிப்பீடியாவில் கதையின் சாராம்சத்தை படிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
மணமான ஒரு பெண்ணைப் பற்றியும், குடும்பத்தில் அவள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் பற்றியும் 'அஸ்மா' பேசுகிறது. அருவியில், வெறும் முதல் 15 நிமிடங்கள் மட்டுமே அருவியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வளர்ப்பைப் பற்றி பேசுகிறது. பிறகு, மொத்தமாக சமூகத்தில் இருக்கும், மக்களுக்கு இருக்கும் பிரச்சினையைப் பற்றி அருவி பேச ஆரம்பிக்கிறது.
இவ்வாறு இயக்குனர் அருண்பிரபு விளக்கமளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com