வரலாறு காணாத கொடூர நிலநடுக்கம்? ஹைதியில் 2,000ஐ நெருங்கும் உயிரிழப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கரீபியன் அருகேயுள்ள தீவு நாடான ஹைதியில் கடந்த சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,941 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
கரீபியன் அருகேயுள்ள ஹைதியின் அதிபர் ஜோவெனல் மோஸ் கடந்த ஜுலை 7 ஆம் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கொரோனாவிற்கு இடையில் ஏழை நாடான இந்த ஹைதியில் தற்போது அரசியல் ரீதியான சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட “கிரேஸ்“ எனும் புயல் தாக்கத்தினால் 7.2 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டின் முக்கிய நகரான லெஸ் கெய்ஸ் மற்றும் போர்ட்-ஓ-பிரின்ஸ் போன்ற நகரங்கள் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது. மேலும் நேற்று காலைவரை இந்த நிலநடுக்கத்தால் 1,941 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 9,900 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
காயம் அடைந்த பலர் தற்போது மருத்துவமனைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். ஆனாலும் சில நகரங்களில் இன்னும் கனமழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டு இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
நூற்றுக்கணக்கான வீடுகள் நொறுங்கிய நிலையில் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாலிதீன் பேப்பர்களுக்கு மத்தியில் ஒளிந்து கொள்ளும் அவலமும் ஏற்பட்டு இருக்கிறது. ஏழை நாடான ஹைதியின் நிலைமை குறித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாக குரல் எழுப்பி இருக்கிறார். உலக நாடுகள் ஹைதிக்கு உதவிச்செய்யுமாறு அவர் அறைகூவல் விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments