'தி டீலர் ஆஃப் டெத்': ஷாருக்கான் ரிலீஸ் செய்த விஜய்சேதுபதியின் 'ஜவான்' போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதியின் கேரக்டர் போஸ்டரை ஷாருக்கான் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த போஸ்டரில் ’தி டீலர் ஆஃப் டெத்’என்ற கேப்ஷனும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான் இரு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில், ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.