கொரோனா நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா. வின் நல்லெண்ணத் தூதராக தேர்வு!!!
- IndiaGlitz, [Friday,June 05 2020]
மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் இவர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 5 கிலோ அசிரி, காய்கறிகள், சமையெல் எண்ணெய் போன்ற பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளை மதுரைச் சுற்றி பல்வேறு இடங்களில் வழங்கியதால் மிகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டார். தனது மகளின் படிப்பு செலவிற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தைக் கொண்டு இந்தப் பொருட்களை வாங்கியதாகவும் கொரோனா நேரத்தில் மக்கள் பசியால் வாடுவதைத் தவிர்ப்பதற்காக இச்செயலை செய்ததாகவும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அவரது மகள் நேத்ரா 9 வகுப்பு படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரும் ஐஏஎஸ் ஆகி ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத் தளங்களிலும் சலூன் கடைக்காரர் மிகவும் புகழப்பட்டு வந்தார். அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மங்கீபாத் நிகழ்ச்சியில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனை வெகுவாகப் பாராட்டி இருந்தார். மேலும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவரது மகள் நேத்ராவை ஐ.நாவின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேத்ராவிற்கு ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா வின் கூட்டமைப்பில் வறுமை மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை பற்றி உரையாற்றுவதற்கு அழைப்பும் விடுக்கப் பட்டு இருக்கிறது. கொரோனா நேரத்தில் ஏழைகளின் பசியை பற்றி நினைத்து பார்த்த சலூன் கடைக்காரரின் புகழ் இப்போது ஐ.நா வரைக்கும் பரவி இருக்கிறது என்பதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.