கொரோனா என நினைத்து தற்கொலை....! ஆதரவற்றோருக்கு சொத்தை எழுதி வைத்த தம்பதி.....!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]


கர்நாடகாவில் கொரோனா என நினைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள், தங்களுடைய சொத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரு பகுதியில் உள்ள சித்ராப்புரா என்ற இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் தான் ரமேஷ் சுவர்ணா தம்பதி. இவர்கள் தங்களுக்கு கொரோனா பரவியதால், உயிர் பிழைப்பது கடினம் அதனால் தற்கொலை செய்யபோகிறோம், என்ற ஆடியோவை மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு அனுப்பியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்துபோன காவல் அதிகாரி, தற்கொலை முயற்சியை கைவிடுமாறு அவர்களிடம் கூறியுள்ளார். இதன்பின்பு அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் உடனே அவர்கள் முகவரியை கண்டுபிடித்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.


ரமேஷ், சுவர்ணா தம்பதிக்கு கடந்த 20 வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து 13 நாட்களிலே இறந்துள்ளது. புத்திரசோகம் மட்டுமில்லாமல், அவரின் மனைவிக்கு சர்க்கரை வியாதி உள்ளதால் தினமும் 2 இன்சுலின் ஊசிகளை போட்டு வந்துள்ளார். தற்போது கொரோனா பயமும் இணைந்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் எழுதி வைத்துள்ள கடிதத்தில் இறுதிச்சடங்கிற்காக 1 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துள்ளோம். எங்களுடைய சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கி விடுங்கள் என்று எழுதி வைத்துள்ளனர்.


இவர்களுக்கு பிரேத பரிசோதனைக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கோவிட் தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பயத்தால் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

செல்வராகவனின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படம் 'சாணிக்காகிதம்' என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் 3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

2 தவணைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின்பு 3 ஆவதாக “பூஸ்டர் டோஸ்“

மயானத்திற்கு வழிவிடாமல் விவசாயம்....! அதற்கான போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்....!

கரூர் மாவட்டத்தில், நெரூர் தென்பாகம் பகுதிக்கு அருகில் உள்ள ஊர் தான் வேடிச்சிபாளையம்

ரஜினியை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினியை இந்தியில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்....!  "அன்றே கணித்தார் தல அஜித்... வைரலாகும் வரிகள்...!

அன்னை தமிழில் அர்ச்சனை நடக்கும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.