கொரோனா என நினைத்து தற்கொலை....! ஆதரவற்றோருக்கு சொத்தை எழுதி வைத்த தம்பதி.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடகாவில் கொரோனா என நினைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள், தங்களுடைய சொத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், மங்களூரு பகுதியில் உள்ள சித்ராப்புரா என்ற இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் தான் ரமேஷ் சுவர்ணா தம்பதி. இவர்கள் தங்களுக்கு கொரோனா பரவியதால், உயிர் பிழைப்பது கடினம் அதனால் தற்கொலை செய்யபோகிறோம், என்ற ஆடியோவை மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு அனுப்பியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்துபோன காவல் அதிகாரி, தற்கொலை முயற்சியை கைவிடுமாறு அவர்களிடம் கூறியுள்ளார். இதன்பின்பு அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால் உடனே அவர்கள் முகவரியை கண்டுபிடித்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.
ரமேஷ், சுவர்ணா தம்பதிக்கு கடந்த 20 வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து 13 நாட்களிலே இறந்துள்ளது. புத்திரசோகம் மட்டுமில்லாமல், அவரின் மனைவிக்கு சர்க்கரை வியாதி உள்ளதால் தினமும் 2 இன்சுலின் ஊசிகளை போட்டு வந்துள்ளார். தற்போது கொரோனா பயமும் இணைந்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் எழுதி வைத்துள்ள கடிதத்தில் "இறுதிச்சடங்கிற்காக 1 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துள்ளோம். எங்களுடைய சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கி விடுங்கள்" என்று எழுதி வைத்துள்ளனர்.
இவர்களுக்கு பிரேத பரிசோதனைக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கோவிட் தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பயத்தால் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com