இந்த ஜோடி 14 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறது மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் மோதிரங்களை மாற்றிக்கொண்டது.
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சரத்குமார் மகள் மற்றும் நடிகையுமான வரலட்சுமிக்கு நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. நாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் வில்லியாகவும் நெகடிவ் ரோலில் மிகவும் போல்டாக நடித்தார். மேலும் சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் உள்ளிட்ட படங்களில் ஸ்டாராங்கான வில்லியாக நடித்து அனைவரது மனதிலும் பதிந்தார்.நாயகியாக நடிப்பதை காட்டிலும்,வில்லியாக நடிப்பது வரலட்சுமிக்கு வெற்றியை கொடுத்தது.சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஜெய் ஹனுமான் படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பிறகு உடற்பயிற்சி கூடம் யோகா என உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்து கொண்டார் ..இன்னும் பல திரைப்படங்கள் கைவசம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா தேவி இருவரின் மகளான வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபரான நிக்கோலய் சக்தேவ்க்கும் நேற்று நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை ராதிகா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
மணமகளை தங்க நிற பட்டுப்புடவைகளால் மேலும் வைர நெக்லஸால் அலங்கரித்து வண்ணமயமாக்கினர்.தம்பதியினரின் குடும்பமும் ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்து,அவர்களது அன்பையும் ஆசிர்வாதத்தையும் வழங்கியுள்ளனர்.நிச்சயதார்த்தம் நடிகர் சரத்குமாரின் பூர்விக வீட்டில் விழாக்கோலமாக நடந்து முடிந்தன.
தொழிலதிபர் நிக்கோலய்க்கு பாலிவுட்டில் பல பிரபலங்களுடன் நெருங்கிய நட்பு உள்ளது.பல வருடங்களுக்கு முன்பே நிக்கோலய்க்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகியுள்ளது ..மேலும் முதல் மனைவியின் மூலம் ஒரு டீன் ஏஜ் மகளும் உள்ளனர்..
ஏற்கனவே வரலட்சுமிக்கும் நடிகர் விஷாலுக்கும் காதல் என பல விமர்சனங்கள் இருந்தன.அப்படி எந்த ஒரு காதலும் எங்களுக்குள் இல்லை என வரலட்சுமி அறிவித்திருந்தனர்.பிறகு சிம்புவுக்கும் வரலட்சுமிக்கும் திருமணம் என கூறப்பட்டது.
எங்களுக்குள் இருப்பது வெறுமனே நட்பு மட்டுமே என வரலட்சுமி பதிலளித்தார்.இப்படியாக பல கிசுகிசுக்கள் நிறைந்த நடிகை வரலட்சுமி ஏன் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்கிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொழிலதிபர் நிக்கோலய் சக்தேவ் மற்றும் நடிகை வரலட்சுமி நீண்ட காலமாக நண்பர்களாகவும் பிறகு அவை காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது..
மேலும் அவர்கள் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்று தற்போது நிச்சயதார்த்தமும் வெகு சிறப்பாக நடந்து முடிந்தன.நிச்சயதார்த்தத்தில் எடுத்த புகைப்படங்களை பார்த்து சோஷியல் மீடியாவில் பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.விரைவில் வரலட்சுமியின் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments