கோலாகலமாக நடந்த தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ரோபி நிகழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ரோபி நிகழ்ச்சி பிப்ரவரி 15ஆம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இசையமைப்பாளர் வித்யாசாகர், படத்தொகுப்பாளர் B.லெனின், இயக்குனர்தி V.சேகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச திரைப்பட விழா என்பது சினிமாவைப்பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு, ஒருசில திரைத்துறையினருக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே எளிதில் தெரிவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் இருக்கிறது. இதை மாற்றி சினிமாவை விரும்பும் கடைக்கோடி மாணவர்களுக்கும், சினிமா விரும்பிகளுக்கும், கனவுகளோடு பயனிக்கும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள், மற்றும் திரைத்துறையினர்களுக்கும், கொண்டு செல்வதற்காகவே இந்த தி கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்படவிழா உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 153 நாடுகளில் இருந்து படைப்புகள் சமர்ப்பிக்கபடுகிறது.
வெளிநாடுகளில் பல சர்வதேச திரைப்படவிழாக்களிலும் பெரும்பாலான மாணவர்கள் 16 வயதிலிருந்தே கலந்து கொள்கின்றனர். ஆனால் இங்கு 33 யதுக்கும் மேற்பட்டவர்களே சர்வதேச திரைப்படவிழாக்கள் பற்றி அறிந்தவர்களாக உள்ளனர். இதைமாற்றி படிக்கும்போதே திரைப்படவிழாக்களை பற்றி புரிதலை உருவாக்குவதே தங்கள் நோக்கமாக கொண்டுள்ளனர்.
கலைத்துறையை யிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் தேடிச்சென்று அவர்களை இதில்பங்கேற்கவைக்கும் நோக்கத்தில் Prof. Dhanapalan College of Science and Management, Chennai மற்றும் AVS College of Arts And Science, Salem உதவியோடு அணைத்து கல்லூரியையும் பங்கேற்கவைக்கவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
திரைப்படம், ஆவணப்படம், திரைக்கதை தொகுப்பு, மொபைல் திரைப்படங்கள், குறும்படங்கள் என்று மொத்தம் 41 பிரிவுகளில் உங்கள் படைப்புகளை Filmfreeway மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 4. திரைப்பட திரையிடல் ஏப்ரல் 20 தேதியில் சேலத்திலும், ஏப்ரல் 21 தேதியில் கோயம்புத்தூரிலும், ஏப்ரல் 22 மதுரையிலும் நடைபெற உள்ளது. விருது வழங்கும் விழா ஏப்ரல் 23 சென்னையில் நடைபெறஉள்ளது. இதில் சர்வதேச திரைப்படங்களுடன் தமிழ் திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படஉள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout