கும்பகோணம் ஐயர் சிக்கன்: சர்ச்சை விளம்பரத்தால் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,August 02 2019]
இதுவரை நாம் 'கும்பகோணம் ஐயர் காபி; என்று தான் விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் முதல்முறையாக மதுரையில் உள்ள ஒரு உணவகம் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற மெனுவை சேர்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சைவ உணவு சாப்பிடும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்களின் கடும் எதிர்ப்பை பெற்றது. இதனையடுத்து அந்த சமூகத்தினர்களை சேர்ந்தவர்கள் நேராக குறிப்பிட்ட அந்த ஓட்டலுக்கு சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அந்த ஓட்டலின் மேலாளர் அவர்களின் மன்னிப்பு கோரியதோடு, உடனடியாக அந்த விளம்பரத்தை நீக்கவும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்தே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது
ஒரு பெயரை பிரபலப்படுத்த வேண்டும் என்றே ஒரு சர்ச்சைக்குரிய பெயரை வைத்து, பின்னர் தங்களது எண்ணம் ஈடேறியதும் மன்னிப்பு கேட்பது தற்போது ஒரு வியாபார உத்தியாக பின்பற்றப்படுகிறது. சமீபத்தில் ஒரு ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் நிறுவனம் மதத்தின் பெயரில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த மதுரை ஓட்டலும் அதே உத்தியை கடைபிடித்துள்ளது. இதுபோன்ற மலிவான விளம்பரத்தை தவிர்த்து தரத்தில் கவனம் செலுத்தினால் தானாகவே அந்த ஓட்டல் பிரபலமாகிவிடும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது.