தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா சங்கராச்சாரியர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் , பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மற்றும் காஞ்சி சங்கராச்சாரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது கவர்னர் உள்பட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளித்தனர். ஆனால் காஞ்சி சங்கராச்சாரியர் மட்டும் உட்கார்ந்த நிலையில் இருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது சங்கராச்சாரியர் எழுந்து நின்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சங்கராச்சாரியர், தேசிய கீதம் மட்டும் ஒலிக்கும்போது எழுந்து நின்றால் என்றால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு தமிழையே பெயராக வைத்துள்ள தமிழிசையும், தமிழ் மீது பற்றுள்ளதாக கூறி வரும் எச்.ராஜாவும் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments