பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? பெரிய ஆச்சரியமில்லை..!

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விஜய் சேதுபதியின் எபிசோடுகள் கூடுதல் விறுவிறுப்பை தருகின்றன என்று பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் கசிய, இது எதிர்பார்த்தது தான் என்று கமெண்டுகள் பதிவாகி வருகின்றன.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நிகழ்வு நடைபெறும் நிலையில், இந்த வாரம் தர்ஷா, ஹன்சிகா, ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, சத்யா மற்றும் சௌந்தர்யா நாமினேஷனில் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி, குறைந்த வாக்குகள் பெற்றதால் தர்ஷா வெளியேறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தர்ஷா மோசமாக விளையாடி வந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது வெளியேற்றம் எந்த ஆச்சரியமும் இல்லையென பார்வையாளர்களால் கூறப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ் ஆகிய இருவரும் வெளியேறிய நிலையில் நாளை தர்ஷாவும் வெளியேறிய வெளியேறிவிட்டால் அதன் பின் தீபாவளி தினத்தில் சில வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்றும், அதன் பின் பிக் பாஸ் விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

More News

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.. விஜய் அறிக்கை..!

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த தளபதி விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை நாளை நடத்த இருக்கின்ற நிலையில்

அஜித்தின் பல படங்களில் பணி புரிந்துள்ளேன்.. அர்ஜுன் தாஸ் கூறிய ஆச்சரிய தகவல்...!

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய நடித்து வரும் நிலையில், ஏற்கனவே அஜித் நடித்த பல படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். "வீரம்" படத்தின் டீசரை ஆன்லைனில் வெளியிட்டது

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? 5 நாள் தொடர் விடுமுறை..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது 'தக்லைஃப்' என்ற படத்தில் நடித்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

'அரண்மனை 5' போஸ்டர் வைரல்.. குஷ்பு கொடுத்த விளக்கம்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' படத்தின் நான்காம் பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.

5 பெண் போட்டியாளர்களில் நாமினேஷனில் இருந்து தப்பியது யார்? ஆழ்ந்த ஆலோசனை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாமினேஷனில் உள்ள பெண்களில் ஒருவரை காப்பாற்றுமாறு