மெர்க்குரி ரிலீஸ் குறித்து கார்த்திக் சுப்புராஜின் குழப்ப விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகம் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒற்றுமையுடன் வேலைநிறுத்தம் செய்து வருவதால் இந்த முறை திரையுலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு கட்டுக்கோப்பாக இதுவரை திரையுலகினரின் வேலைநிறுத்தம் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'மெர்க்குரி' திரைப்படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், இந்த படம் வரும் ஸ்டிரைக்கை மீறி வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜூக்கு சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருசிலர் டிரைலர் மற்றும் படத்தின் ரிலீசை தள்ளி வைக்கும்படி கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டுக்கொண்டனர்
இந்த நிலையில் இன்று டிரைலர் ரிலீசை ரத்து செய்த கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் மெர்க்குரி படக்குழுவினர் இருப்பதாகவும், ஸ்டிரைக் முடியும் வரை 'மெர்க்குரி' படத்தின் தமிழ்ப்பதிப்பு வெளிவராது என்றும், ஆயிரக்கணக்கானோர் நம்பிக்கையை போல் தங்களுக்கும் திரையுலகின் பிரச்சனை தீர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தமிழ்ப்பதிப்பு மட்டும் வெளிவராது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாகவும், வசனமே இல்லாத 'மெர்க்குரி' படத்திற்கு தமிழ் மொழி பதிப்பு என்ற ஒன்று உண்டா? என்றும் ஒருசிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படியானால் மற்ற மாநிலங்களில் 'மெர்க்குரி' ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் ஒருசிலரிடம் எழுந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments