மீண்டும் டப்பிங் யூனியனில் சேர சின்மயிக்கு நிபந்தனை
Send us your feedback to audioarticles@vaarta.com
கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டு மற்றும் டப்பிங் யூனியன் மீது தொடர் குற்றச்சாட்டு கூறி பாடகி சின்மயி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
பாடகி சின்மயி டப்பிங் யூனியனுக்கு இரண்டு வருடமாக சந்தா செலுத்தவில்லை என்றும் இதுகுறித்து அனுப்பபட்ட கடிதத்திற்கும் எந்த பதிலும் இல்லாததால் அவர் நீக்கப்பட்டதாகவும் டப்பிங் யூனியன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த்து
இந்த நிலையில் ஒன்றரை லட்சம் முன் பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து, புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் பாடகி சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் புது உறுப்பினராக சேர்த்து கொள்வோம் என டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் மீண்டும் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments