அதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்!

 

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடிவடிக்கையாக, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்தார். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு அளித்து உள்ளனர்.

மேலும் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் டிசம்பர் மாதம் வரை இலவசமாக வழங்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களின் இதர தேவைகளை கருத்தில் கொண்டு நிவாரண உதவியாக 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை மக்களும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நிவர் மற்றும் புரெவி போன்ற புயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை திரும்பி தொடங்கிவிடும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

இதனால் கடன் தள்ளுபடி மூலம் தங்களது வாழ்க்கையை மறுபடியும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதாக கூறி விவசாய சங்கங்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தன. இதேபோல் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைகளை வைத்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டச் சபையில் தெரிவித்தார்.

இந்த நகைகடன் தள்ளுபடி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களது வாழ்க்கையை மீட்டுக் கொடுத்துள்ளதாக ஏழை, எளிய மக்கள் தற்போது நன்றி தெரிவிக்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் மட்டும் அல்லாது ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்து உள்ளார்.

More News

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் திடீர் பெயர் மாற்றம்? கிண்டல் அடித்த 2 பிரபலங்கள்!

அகமதாபாத்தில் உள்ள மோதேரா கிரிக்கெட் மைதானத்தை மத்திய அரசு உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாற்றி உள்ளது.

உருவாகிறது புதிய கூட்டணி: கமல்ஹாசன் - சரத்குமார் சந்திப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது

20 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்!

சூர்யா நடிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே.

ஒரே விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு? அதிர்ச்சி தகவல்!

மாகாராஷ்டிரா மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்காக இயக்கப்பட்டு வந்த உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வந்த 98 மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஷிவாங்கியிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்: என்ன பதில் சொன்னார் தெரியுமா?

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக அஜித் ரசிகர்கள் படக்குழுவினர்களிடம் கேட்டுக் கொண்டிருந்த போதிலும் அப்டேட் எப்போது வரும் என்ற தகவல் கூட வெளிவரவில்லை