தினகரன் அணி எம்.எல்.ஏவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட் அதிரடி

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் சார்பில் நாளை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூடவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அனைவருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வெற்றிவேல் எம்.எல்.ஏவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்தது. எனவே நாளை அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,