துளைக்குள் இறங்கும் 3 தீயணைப்பு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டு என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்ததை அடுத்து அந்த குழந்தையை மீட்க கடந்த 76 மணி நேரமாக மீட்புப்படையினர் போராடி வருகின்றனர்.
சிறுவன் சுர்ஜித் முதலில் 26 அடியிலும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி தற்போது 86 அடி ஆழத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுர்ஜித்தை மீட்க மீட்புப்படையினர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று காலை எடுத்த திட்டத்தின்படி சுர்ஜித் மாட்டியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஒரு பெரிய துளை ஏற்படுத்தி அந்த துளையில் இருந்து ஆழ்துளை கிணறுக்கு பக்கவாட்டு பாதையை ஏற்படுத்தி அதன் மூலம் சுர்ஜித்தை மீட்க முடிவு செய்யப் பட்டது
இதனையடுத்து நேற்று காலை முதல் துளை போடும் பணி தொடங்கியது. ரிட் இயந்திரம் மற்றும் போர்வெல் மிஷின் ஆகியவற்றின் உதவியால் கடந்த 36 மணி நேரமாக இந்த துளை போடப்பட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்தத் துளையில் 3 தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கவுள்ளனர். கிட்டத்தட்ட 100 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட இந்த துளையில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். தரைக்கு மேல் உள்ள வெப்பநிலைக்கும், 100 அடிக்கு கீழ் உள்ள வெப்பநிலைக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கும் என்பதால் அதற்கேற்றவாறு தயார் நிலையில் இந்த மூன்று வீரர்களும் இறங்கவுள்ளனர்.
அதுமட்டுமின்றி கீழே இறங்கிய உடன் அங்கிருந்து பக்கவாட்டில் ஒரு துளை போட்டு பாதை ஏற்படுத்த வேண்டும். அந்த பக்கவாதத்தை போடுவதற்காக சுமார் 40 கிலோ எடையுள்ள ட்ரில்லிங் மெஷினை அவர்கள் எடுத்துச் செல்ல உள்ளனர். மேலிருந்து கீழாக துளை போடுவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயம். ஆனால் பக்கவாட்டில் துளை போடுவது என்பது சவாலான விஷயம். அந்த பக்கவாட்டு துளைபோடும் இயந்திரத்தின் எடையை கையில் பிடித்துக் கொண்டே துளைபோட வேண்டும் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவ்வளவு பெரிய எடையை கைகளை பிடித்துக்கொண்டு துளையும் போடுவது என்பது 3 வீரர்களுக்கும் ஒரு சவாலான காரியம் ஆகும்
இந்த சவாலை முறியடித்து பக்கவாட்டு துளையை ஏற்படுத்தி ஆழ்துளை கிணற்றுக்கு பாதை ஏற்படுத்தி சுர்ஜித்தை உயிருடன் மீட்க இந்த மூன்று வீரர்களும் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து இறங்கவுள்ளனர். அவர்களுடைய முயற்சி வெற்றி பெற அனைவரும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments