புயலுக்கு பின் அமைதி.. அமைதிக்கு பின் ஒரு புயல்.. த்ரிஷா வர்ணித்தது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ’புயலுக்கு பின் ஓர் அமைதி, அமைதிக்கு பின் ஒரு புயல். என்று வர்ணித்து தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பதும் நேற்றைய அவர் பிறந்த நாளின் போது அவர் நடித்து முடித்துள்ள ’கோட்’ கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் விஜய்யுடன் ’கில்லி’ ’ஆதி’ ‘குருவி’, ‘திருப்பாச்சி’, ‘லியோ’ போன்ற படங்களில் நடித்த நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அவர் ‘கோட்’ படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பதிவாக நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் ’புயலுக்கு பின் அமைதி, அமைதிக்கு பின் ஒரு புயல், இன்னும் பல மைல்கற்களை சந்திக்க இருப்பவர்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
The calm to a storm,The storm to a calm!
— Trish (@trishtrashers) June 23, 2024
To many more milestones ahead🎂🎈
♥️♾️🧿 pic.twitter.com/k4ZK75v7PZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments