விக்ரமுடன் இருக்கும் இந்த சிறுவன், இன்று ஹீரோ: யாரென தெரிகிறதா?

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

மேலே உள்ள புகைப்படத்தில் விக்ரம் மற்றும் சுஜித்ரா ஆகிய இருவருடன் இருக்கும் சிறுவன் இன்று தமிழ், மலையாள திரையுலகில் ஹீரோவாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விக்ரமுடன் இருக்கும் இந்த சிறுவன் பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஒரு சில மலையாள படங்களில் நடித்தாலும் தமிழில் ’மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் ’புத்தம் புது காலை’ மற்றும் ‘பாவக்கதைகள்’ ஆகிய வெப்தொடரில் நடித்த காளிதாஸ்க்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப்தொடரின் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ரஜினி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி-தமன்னா: வைரல் புகைப்படம்

விஜய்சேதுபதி மற்றும் தமன்னா ஆகிய இருவரும் சீனு ராமசாமி இயக்கிய 'தர்மதுரை' என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்கள் என்பதும் இருவருமே டாக்டர் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது

கமல்ஹாசன் பெயரை எழுதியே உலக சாதனை செய்த பெண்!

கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி உலக சாதனை செய்த இளம்பெண்ணுக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே வந்த செய்திகளைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இயக்குனர் ஷங்கரின்

மதுரை இலங்கை தமிழர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் உதவி!

மதுரையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அமலாபால் நடித்த அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் ரிலீஸ் தகவல்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரான அமலாபால் நடித்துள்ள அடுத்த படத்தின் தகவல்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்