'தளபதி 62' குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் விரைவில் ஐரோபிய நாடுகளுக்கு செல்லவுள்ளனர். மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படம் குறித்த தகவல்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் கசிந்து வந்தது. இந்த படம் குறித்து தற்போது கிடைத்துள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலின்படி 'தளபதி 62' படத்தை இயக்குவது ஏ.ஆர்.முருகதாஸ் என்பதும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படம் 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கண்ட தகவல்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-லைகா இணைந்த 'கத்தி' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.