பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'லேடி பேர்ட்' படத்திற்கு விருது இல்லை: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

இன்று நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை வென்று குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் 'லேடி பேர்ட்'. ஒரு டீன் ஏஜ் பள்ளி மாணவிக்கும் அவரது தாய்க்கும் நடக்கும் கருத்து மோதல்கள், ஈகோ போராட்டம் தான் இந்த படத்தின் கதை. கிரெட்டா கெர்விக் இயக்கிய இத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை சாவோய்ர்ஸ் ரோனான், லேடி பேர்ட் என்னும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவருக்கு உறுதியாக சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகள் கொண்டாடிய இந்த படம் ஐந்து பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த 'தி ஷே ஆஃப் வாட்டர்' படத்திற்கு நான்கு ஆஸ்கார் விருதுகளும், கிறிஸ்டோபர் நோலனின் 'டன்க்ரிக்' படத்திற்கு மூன்று ஆஸ்கார் விருதுகளும் கிடைத்துள்ளது.

More News

அர்ஜூன் ரெட்டி' நாயகனுடன் ஜோடி போடும் சுசீந்திரன் பட நாயகி

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'அர்ஜூன் ரெட்டி'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சீயான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார்

4 ஆஸ்காரை வென்ற தி ஷேப் ஆப் வாட்டர்’: மற்ற விருதுகள் யாருக்கு?

இன்று காலை முதல் நடைபெற்று வரும் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் இதுவரை நான்கு விருதுகளை வென்றுள்ளது.

ஆஸ்கார் விழாவில் தமிழ் நடிகைக்கு கிடைத்த மரியாதை

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவிற்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து

நயன்தாரா கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். புதிய வரவு நடிகைகளும் ஏற்கனவே உள்ள நடிகைகளும் அவரது இடத்தை அசைக்க முடியாத நிலையே தற்போது வரை உள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஹிட் படத்தின் சென்னை வசூல் நிலவரம்

2018ஆம் ஆண்டில் விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்திகரமான லாபத்தை கொடுத்த முதல் படம் என்ற பெருமை சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.