திமிறும் யானையோடு போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் நடிகை… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை சாக்ஷி அகர்வால் திமிறிக்கொண்டு இருக்கும் யானையுடன் போட்டோ ஷுட் நடத்தி அதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். எப்போதும் போல இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா திரைப்படத்திலும் தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்திலும் கூடவே ராஜா ராணி போன்ற ஒருசில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றியவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதனால் இன்ஸ்டாவில் இவருடைய ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டி யானையோடு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். படுத்துக் கொண்டு இருக்கும் அந்த யானை சாக்ஷி அருகில் சென்றவுடன் திமிறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது அரண்மனை 3 படத்திலும் புரவி மற்றும் நடிகை ராய் லட்சுமியுடன் இணைந்து சிண்ட்ரெல்லா எனும் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். இந்தப் படங்கள் தற்போது ரிலீசுக்கு காத்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இணையும் ஆர்யா-சக்தி செளந்திரராஜன்: 'டெடி 2' உருவாகிறதா?

ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான 'டெடி' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்கள்

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்....!

தமிழ் சினிமாவிற்கு சந்திரலேகா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ஜெமினி ராஜேஷ்வரி.

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு தளர்வுகள்.. எவையெல்லாம் இயங்கும்?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் ஜுலை 5 ஆம் தேதி வரை பிறப்பி

மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின்: ஷங்கரின் நெகிழ்ச்சியான பதிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோகித் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார் என்பது தெரிந்ததே

ரஜினி பாடலை பாடி ஆடும் வெளிநாட்டினர்: ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அசத்தல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் பாடல் ஒன்றை வெளிநாட்டினர் பாடி அழகாக நடனமாடிய அசத்தல் வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள