என்னய்யா நடக்குது 2020ல்ல: தமிழ்நாடு வெதர்மேன் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை பொழியும்போது வறட்சியான பகுதியாக கருதப்படும் தமிழக பகுதி ஒன்று மழையில் 100ஆண்டு சாதனையை முறியடித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழையின்போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மிகக்குறைவான மழையே பெய்யும். வடகிழக்கு பருவமழையின்போது இந்த பகுதியில் அதிக மழை பெய்தாலும் தென்மேற்கு பருவமழையின்போது இந்த பகுதி வறட்சியாகவே கருதப்படும். ஆனால் நேற்று பாம்பன் பகுதியில் ஒருசில மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பெய்துள்ளது. ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் அதிகபட்சம் பாம்பன் பகுதியில் 66மிமீ மழை மட்டுமே பதிவாகி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பெய்தது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த 1910ஆம் ஆண்டு 103.6 மிமீ மழை பெய்ததே சாதனையாக இருந்தது ஆனால் 100 வருடங்களுக்கு முன் பதிவான இந்த சாதனையை சில மணி நேரத்தில் பாம்பனில் நேற்று பெய்த மழை முறியடித்து உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
Ennaya nadakuthu in 2020. All time 24hrs & monthly rainfall for August in Pamban in 100 years with 121.8 mm rainfall in few hours. https://t.co/QVdopnnVfx
— TamilNadu Weatherman (@praddy06) August 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments