நாசர் மகனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றுக்கு திரைப்படம் பார்க்க சென்றபோது தனக்கும் தனது மகனுக்கும் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நாசரின் மனைவி கமீலா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கமீலா நாசர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்கு தேவையான வசதியை சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் அமைத்து தரவில்லை. சக்கர நாற்காலி செல்லும் வகையில் எந்த தியேட்டரிலும் சாய்வு பாதையும் இல்லை. எனவே அந்த பிரபல தியேட்டரில் படம் பார்க்க நானும் எனது மகனும் சென்று மோசமான அனுபவத்தை பெற்றோம் என்று கமீலா நாசர் குறிப்பிட்டுள்ளார்.
தியேட்டர் உள்பட மக்கள் கூடும் பொது இடங்களில் மாற்றுத்திறனாள் வருவதற்கு வசதியாக சக்கர நாற்காலி மற்றும் சாய்வுப்பாதை அமைக்க வேண்டும் என்ற விதி இருக்கையில் பெரும்பாலான் கட்டிடங்களில் இந்த வசதி இல்லை என்பதே வருத்தமான செய்தி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments