ஐஸ்வர்யா-மும்தாஜுக்கு கிடைத்த அமைதியும் ரித்விகாவிற்கு கிடைத்த ஆர்ப்பாட்டமும்
- IndiaGlitz, [Sunday,September 16 2018]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு போட்டியாளருக்கு மக்களின் மத்தியில் மதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை சனி, ஞாயிறு தினத்தில் பங்கேற்கும் ஆடியன்ஸ்களிடம் இருந்து வெளிப்படும் அமைதி, ஆர்ப்பாட்டத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். என்னதால் பிக்பாஸ் கமல்ஹாசனிடம் கலர்கலராக கிராப் சார்ட்டுகளை கொடுத்தாலும் ஆடியன்ஸ் எபெக்ட் அவை உண்மையா? பொய்யா? என்பதை நிரூபித்துவிடும்.
அந்த வகையில் ஒருசில உதாரணங்களை பார்ப்போம். கடந்த வாரம் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார் என்று கமல் அறிவித்தபோது ஆடியன்ஸில் உள்ள ஒருவர் கூட கைதட்டவில்லை. அரங்கமே அமைதியாக இருந்தது. மக்கள் சரியாக வாக்களிக்கவில்லை, மக்களுக்கு வாக்களிக்க தெரியவில்லை என்று கமல் சமாளிக்க முயன்றாலும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே ஆடியன்ஸ் மெளனம் காட்டியது. அதேபோல் நேற்று மும்தாஜ் காப்பாற்றப்பட விரும்புவதாக ஆர்த்தி கூறியபோதும் ஒருவர்கூட கைதட்டவில்லை. ஏனெனில் மும்தாஜ் வெளியேற்றப்பட வேண்டியவர் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் ரித்விகா காப்பாற்றப்பட வேண்டும் என சினேகன், வையாபுரி, காயத்ரி, சுஜா ஆகியோர் கூறியதும் அரங்கேமே கைதட்டி ஆர்ப்பாட்டம் செய்தது. இதில் இருந்தே மக்கள் மனதை கவர்ந்தவர் யார்? கவராதவர் யார் என்பது புரிய வந்துள்ளது. இனிமேலும் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பிக்பாஸ் முடிவெடுக்கும்போது இதனை கவனத்தில் கொள்வது நலம்.
#ரித்விகா! ?????? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil @ikamalhaasan #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/RrScZxf3w1
— Vijay Television (@vijaytelevision) September 15, 2018