இந்தியாவின் பதிலடி தொடரும்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்களை 1000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளால் அழித்துள்ளது. அதிகாலை நடந்த இந்த தாக்குதல் பாலாகோட், சாக்கோதி, முஷாஃபராபாத் உள்பட மொத்தம் 12 இடங்களில் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் இந்திய விமானப்படையின் தாக்குதல்களை முன்கூட்டியே பாகிஸ்தான் ஊகித்திருந்தாலும், எந்த இடத்தில் தாக்கப்போகிறது என்பது பாகிஸ்தானுக்கு தெரியாது. மேலும் தாக்குதல் நடக்கும் ஒருசில வினாடிகளுக்கு முன்னரே எதிரி நாடு அந்த தாக்குதலை தடுத்து நிறுத்தும். ஆனால் இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தானால் கண்டுபிடிக்க முடியாததால் 12 இடங்களில் துல்லியமாக தாக்குதல் நடந்ததை அந்நாடால் தடுக்க முடியவில்லை என முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் ஒரு ஆரம்பம்தான் என்றும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இன்னும் தாக்குதல் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியா-பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் அந்த போர் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்றும் பூகோள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் பலகீனமாக இருப்பதால் அந்நாட்டால் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் போர் செய்ய முடியாது என்றும் கர்னல் ஹரிஹரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout