சில நாட்களுக்கு முன் திருமணமான பிரபல நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் ஆச்சரியம்

சில நாட்களுக்கு முன்னர் திருமணமான பிரபல நடிகை ஒருவர் கர்ப்பமானதை அடுத்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 70 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த சமூக வலைதள பதிவும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகை ஆலியா பட் தற்போது ’பிரம்மாஸ்திரா’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதால் விரைவில் அவர் அந்த படங்களில் உள்ள தனது பகுதியின் படப்பிடிப்பை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.