'96' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்கள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகள் போலவே எண்ணியதால் இந்த படம் மக்களின் மனதில் ஆழப்பதிந்தது. மெதுவான திரைக்கதையாக இருந்தாலும் இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
திரையுலகினர்களை சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் எந்த படத்திற்கும் கிடைக்காத ஒரு பெருமை தற்போது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.
'96 தனிப்பெருங்காதல்' என்ற இந்த திரைப்படம் குறித்து ஒரு புத்தகத்தை சரவண கார்த்திகேயன் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவணர் நூலகத்தில் நடைபெறவுள்ளது. '96' திரைப்பட இயக்குனர் பிரேம்குமார் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
96 : தனிப்பெருங்காதல்
— VijaySethupathi (@VijaySethuOffl) December 29, 2018
நூல் வெளியீட்டு விழா@trishtrashers @Premkumar1710 @govind_vasantha @proyuvraaj @MadrasEnterpriz @7screenstudio pic.twitter.com/axGCHKUDWR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments