'96' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்கள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகள் போலவே எண்ணியதால் இந்த படம் மக்களின் மனதில் ஆழப்பதிந்தது. மெதுவான திரைக்கதையாக இருந்தாலும் இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

திரையுலகினர்களை சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் எந்த படத்திற்கும் கிடைக்காத ஒரு பெருமை தற்போது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

'96 தனிப்பெருங்காதல்' என்ற இந்த திரைப்படம் குறித்து ஒரு புத்தகத்தை சரவண கார்த்திகேயன் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவணர் நூலகத்தில் நடைபெறவுள்ளது. '96' திரைப்பட இயக்குனர் பிரேம்குமார் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

More News

இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்

'வெண்ணிலா கபடிக்குழு' மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'அழகர்சாமியின் குதிரை', 'பாயும் புலி' 'பாண்டிய நாடு', 'ஜீவா', 'உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்

விக்ரமின் அடுத்த படத்தில் 'வேதாளம்' வில்லன்

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'வேதாளம்' படத்தின் வில்லன்களில் ஒருவராக கபீர்சிங் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே.

பா.ரஞ்சித் கலை நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி ஆவேச பேச்சு

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'வானம்' கலை நிகழ்ச்சி இன்று முதல் மூன்று நாட்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெறுகிறது.

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த கமல்ஹாசன் திரைப்படம்

வரும் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

வங்கிக்கணக்கு முடக்கம் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வங்கிக்கணக்கை நேற்று ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியதாகவும், அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது