எஸ்பிபி குறித்து ஊடகங்களில் தவறான செய்தி: எஸ்பிபி சரண்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டபின்னரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை எஸ்பிபி சரண் அவர்கள் மறுத்துள்ளார்.

எஸ்பிபி அவர்களுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவல் தகவல் தவறு என்றும் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்பிபி அவர்கள் குறித்து உடல் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நேரடியாக என்னிடம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவருடைய லேட்டஸ்ட் அப்டேட்களை நான் கூறுகிறேன் என்றும், தயவு செய்து ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் எஸ்பிபி அவர்கள் குணமாக பிரார்த்தனை செய்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.