ஆஸ்கர் வெற்றியில் ஜொலிக்கும் பெண்கள்… வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்த சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
63 ஆவது ஆஸ்கர் விருதுப் பட்டியலில் 17 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விருது பட்டியலில் 15 பெண்கள் மட்டுமே இடம்பெற்ற நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக 17 பெண்கள் இந்த 2021 ஆஸ்கர் விருதுபட்டியலில் இடம்பிடித்து இருப்பது ஒரு பெரும் முன்னேற்றமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஒரு இளம் பெண் இயக்குநர் இரண்டாவது பெண் இயக்குநராக ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்று இருக்கிறார். அதோடு அவர் முதல் ஆசிய பெண் இயக்குநர் என்பதும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2015- 12 பெண்களும், 2017 இல் 12 பெண்களும் 2018 இல் 6 பெண்களும் 2019 இல் 15 பெண்களும் 2020 இல் 13 பெண்களும் ஆஸ்கர் விருதினைத் தட்டிச் சென்றுள்ளனர். இதில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் பட்டியலுக்கு 70 பெண்கள் பரிந்துரைக்கப் பட்டனர். அதில் 17 பெண்கள் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றுள்ளனர்.
சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டர்மாண்ட் (63)
சிறந்த இயக்குநர் – குளோயி ஜாவ் (39)
சிறந்த படம் – மொலி ஆஷர் (நோமட் லேண்ட்)
சிறந்த துணை நடிகைக்கான விருது – யுஹ்ஜுங் யோன் (முதல் கொரிய நடிகை)
சிறந்த திரைக்கதை – எமரால்ட் ஃபென்னல் (பிராமிசிங் யங் வுமன்) (அசல்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - டானா முர்ரே (சோல்)
சிறந்த ஆவணப்படம் – பிப்பா எர்லிச் (மை ஆக்டோபஸ் டீச்சர்)
சிறந்த ஆவணக் குறும்படம் – அலைஸ் டோயர்ட் (கொலட்)
சிறந்த ஆடை வடிவமைப்பு – அன்னே ராத் (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்)
சிறந்த ஒப்பனை மற்றும் கூந்தல் அலங்காரம் - மியா நீல், ஜாமிகா வில்சன்
ஒலி வடிவமைப்பு – மிச்செல் (சவுண்ட் ஆஃப் மெடல்)
கலை இயக்கம் – ஜான் பாஸ்கல் (மான்க்)
பாடல் - ஹெர் (கேப்ரியல்லா), டியாரா தாமஸ்
2021 பட்டியலில் 17 என்ற எண்ணிக்கை அடுத்தடுத்த ஆஸ்கர் பட்டியலின்போது மேலும் எகிற வேண்டும் என்பதற்கு இந்த பட்டியலும் ஒரு சாட்சியாக நிற்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com