700 வருடங்களுக்கு முந்தைய கல்லால் செய்யப்பட்ட வாள் கண்டுபிடிப்பு
- IndiaGlitz, [Thursday,October 24 2019]
தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போஸ்னியா என்ற நாட்டில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லால் செய்யப்பட்ட வாள் ஒன்றை நதிக்கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது
போஸியாவில் உள்ள விர்பாஸ் என்ற ஆற்றின் கரையில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான பொருளைக் கண்டு அதிசயித்தனர். உடனடியாக அந்த பொருள் குறித்து தொல்பொருள் துறையினருக்கு தகவல் அளித்த போது, அவர்கள் வந்து அந்த பொருளை ஆய்வு செய்தபோது அந்த பொருள் கல்லினால் செய்யப்பட்ட வாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அதாவது 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆர்தர் என்ற அரசரின் சின்னம் அந்த வாளில் பொறிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய காலத்தில் தான் அந்த வாள் செய்யப்பட்டிருக்கும் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்
தமிழகத்திலுள்ள கீழடியில் பல பழங்கால பொருள்கள் கிடைத்து வரும் நிலையில் தற்போது போஸ்னியாவில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லினால் செய்யப்பட்ட வாள் கிடைத்துள்ளது ஊடகங்களின் தலைப்பு செய்தியாகியுள்ளது. இந்த வாள் குறித்து தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் அந்த பகுதியில் மேலும் இதே மாதிரி சில பொருட்கள் கிடைக்க வாய்ப்பு தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்