கொரோனா பாதிப்பால் பலியான இன்னொரு தமிழ் திரையுலக பிரபலம்!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் என்பதையும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு திரையுலகினர்களையும் விட்டு வைக்காமல் தினந்தோறும் திரையுலகினர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்து வருவது குறித்தும் பலியாகி வருவது குறித்துமான செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

ஏற்கனவே கொரோனா வைரஸ்க்கு இயக்குனர்கள் எஸ்பி ஜனநாதன், கேவி ஆனந்த், தாமிரா உள்ளிட்ட பலர் பலியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாருஹாசன் ’தாதா 87’ என்ற படத்தை தயாரித்து இயக்கியவர் விஜய்ஸ்ரீ என்பது தெரிந்ததே. இந்த படத்தை விஜய்ஸ்ரீ அவர்களுடன் இணைந்து தயாரித்தவர் கலைச்செல்வன். இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இது குறித்து இயக்குனர் விஜய்ஸ்ரீ தனது டுவிட்டரில்பதிவு செய்திருப்பதாவது: தாதா87 படத்தை என்னுடன் இணைத்து தயாரித்த எனது நண்பர் கலைச்செல்வன் இன்று கொரோனா என்னும் கொடிய வைரசால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உங்கனை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளார்.