பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக்பாஸ் புகழ் தர்ஷன், சமீபத்தில் நடிகை சனம்ஷெட்டியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தமும் செய்துவிட்டு அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தர்ஷனும் மீடியா முன்பு தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இந்த நிலையில் தனது காதல் தோல்வி குறித்து தர்ஷன் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒருசில காரணங்களுக்காக உறவுகள் தோற்பது உண்டு. அந்த உறவில் இருக்கும் ஒருவரோ அல்லது இருவருமோ மகிழ்ச்சியாக இல்லை என்றால் பிரச்சனை பெரிதாவதற்குள் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வது தான் நல்லது. மகிழ்ச்சியில்லாத உறவு நீடிப்பது சரி அல்ல.
அந்த நபர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஆனால் நிலைமை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. என்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து என் மீது அபாண்டமாக புகார் கூறுகின்றார்கள். அதில் எந்த புகாரும் உண்மை இல்லை. என் கேரக்டரை மீடியாவும், உண்மை தெரியாதவர்களும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் நான் காயம் அடைந்துள்ளேன். இதனால் சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் தள்ளி இருந்தேன்.
வாழ்க்கையில் பின்னடைவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதில் இருந்து நான் பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். தற்போது என் எதிர்காலத்தில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன். என்னுடைய பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு என் நன்றி’ என தர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments