தனுஷுக்கு 'தரலோக்கல்' என்றால் விஜய்க்கு 'உலக தரலோக்கல்?

  • IndiaGlitz, [Thursday,August 13 2015]

சமீபத்தில் வெளிவந்த தனுஷின் 'மாரி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தரலோக்கல்' பாடல் சூப்பர் ஹிட் ஆகியது என்பதை அனைவரும் அறிவோம். தனுஷ், அனிருத் பாடிய அந்த பாடலை அடுத்து இன்னுமொரு பாடல் அதுவும் 'உலக தரலோக்கல்' என்ற பெயருடன் விரைவில் வெளிவரவுள்ளது. 'விஜய் 59' படத்திற்கு இசையமைத்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் இந்த 'உலக தரலோக்கல்' பாடலை கம்போஸ் செய்து வருவதாகவும், இந்த பாடல் கானாவுடன் அமைந்த குத்துப்பாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


ஜி.வி.பிரகாஷின் இசையில் அமையவுள்ள இந்த பாடலை அனேகமாக விஜய் பாடுவார் என்று கூறப்படுகிறது. பொதுவாக தரலோக்கல் பாடல் என்றாலே கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். இந்நிலையில் இந்த பாடலை விஜய் பாடினால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இப்பொழுதே #UlagaTharaLocal என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்த பாடலை விரைவில் எதிர்பார்ப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.,

விஜய், சமந்தா, இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரிக்க, அட்லி இயக்கி வருகிறார். வரும் 2016 பொங்கல் தினத்தில் இந்த படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.