இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் வரலட்சுமி?

  • IndiaGlitz, [Monday,August 31 2015]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. சசிகுமார், வரலட்சுமி, பிரகதி குருபிரசாத், காவ்யா ஷா, சுரேஷ், ஆனந்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு செழியன் ஒளிப்பதிவாளராகவும், கிஷோர் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர்.

வரலட்சுமி இந்த படத்தில் கரகாட்ட நடனக்கலைஞர் வேடத்தில் மிக அபாரமாக நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளாராம்.

படப்பிடிப்பு முடிவடைந்தும் சசிகுமார் உள்பட அனனத்து நடிகர்களும் வேறு படத்தில் கவனம் செலுத்த சென்றுவிட்ட நிலையில் வரலட்சுமி மட்டும் உதவி இயக்குனர் என்ற முறையில் போஸ்ட் புரடொக்ஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். வரலட்சுமியின் ஆர்வம் மற்றும் கடின உழைப்பை பார்த்து பாலாவே அவரை பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் வரலட்சுமி ஒரு நல்ல இயக்குனராக வருவார் என பாலா வாழ்த்தியுள்ளதாகவும் தகவல்கல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அர்ஜூன், பிரசன்னா நடிப்பில் அருண் வைத்தியநாதன் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றிலும் வரலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை, உதவி இயக்குனர் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் வரலட்சுமி இரண்டு துறைகளிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.