இயக்குனர் பாலாவுக்கு சென்சார் கொடுத்த அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,December 30 2015]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் இன்று தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டது.


'தாரை தப்பட்டை' படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு 'A' சர்டிபிகேட் கொடுத்து அதிர்ச்சியளித்துள்ளனர். தணிக்கை அதிகாரிகள் கூறிய ஒருசில காட்சிகளை நீக்க இயக்குனர் பாலா ஒப்புக்கொள்ளாததால் இந்த படத்திற்கு 'A' சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு 'A' சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் வசூலில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் பாலாவுக்கென இருக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்குகளில் சென்று பார்ப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைக்காது என்பது மட்டுமே இந்த படத்திற்கு ஒரு குறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

சூர்யாவுடன் செல்பி எடுத்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய திருவனந்தபுரம் எம்.பியுமான சசிதரூர் அவர்களை கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ...

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாதவன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. ராஜ்குமார்ஹிரானி மற்றும் சசிகாந்த் தயாரித்துள்ள...

'சிங்கம் 3' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

வரும் ஜனவரி 10ஆம் தேதி விக்ரம்- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

2.0' படத்தில் இருந்து வெளியேறுகிறார் எமிஜாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின்....

ஆஷ்னா ஜாவேரியின் மீன்குழம்பு சமையல் ஆரம்பம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், 'ஈஷான் புரடொக்ஷன்ஸ்'...