தளபதி விஜய்க்கு ஒரு தரலோக்கல் பாடல் கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை பின்னி மில்லில் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தளபதி விஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த தரலோக்கல் பாடலின் படப்பிடிப்பு தான் தற்போது நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும், இந்த பாடல் திரையில் தோன்றும்போது திரையரங்கமே அதிரும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.