close
Choose your channels

'லியோ' படத்தில் தர லோக்கல் குத்து பாட்டு.. ரசிகர்களுக்கு வேற லெவலில் விருந்து..!

Monday, June 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது என்பதை பார்த்தோம். சுமார் 1500 நடன கலைஞர்கள் இந்த பாடல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் விஜய் பாடி நடனமாடும் இந்த பாடல் வேற லெவல் குத்து பாடலாக உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விஜய் - அனிருத் காம்பினேஷன் என்றாலே அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நிலையில் இந்த பாடல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் தர லோக்கல் குத்து பாட்டாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பாடல் திரையில் தோன்றும் போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெகு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளன.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment